மரண பள்ளங்களாக மாறிய ஆவடி - கேம்ப் சாலை உடனே சீரமைக்க மக்கள் கோரிக்கை
மாதவரம்:மாதவரம், புதிய கன்னியம்மன் பகுதியில் சாலைகள் மரண பள்ளங்களாக மாறியுள்ளன. அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் முதல் நகர் முதல் வீராபுரம் 'கேம்ப்' வரையிலான சாலை முற்றிலும் சேதமாகி, மரண பள்ளங்களாக மாறியுள்ளன. சாலை பராமரிப்பை, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். இவர்கள் பள்ளத்த ை செம்மண் கொட்டி சீர்படுத்துகின்றனர். அடுத்த சில நாட்களிலேயே, வாகன போக்குவரத்தால் அவ்விடம் புழுதிமண்டலமாக மாறிவிடுகிறது. மழை பெய்யும்போது சகதியாக மாறி மீண்டும் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிறது. இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆவடி - கேம்ப் சாலை பல இடங்களில் மோசமாக மாறி, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய சாலை போட கோரினால், செம்மண் மட்டுமே கொட்டிவிட்டு செல்கின்றனர். அதுவும் சில நாட்களிலே பல்லிளித்து விடுகிறது. கடந்த ஆறு மாதமாக இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த ரூட்டில் வரும் புதிய மாநகர பேருந்துகள் கூட, சில நாட்களிலேயே நாசமாகி விடும் நிலைமை உள்ளது. மழைக்காலத்திற்குள் இச்சாலையை சீரமைத்தால் மட்டுமே, மக்கள் விபத்து, அசம்பாவிதங்களில் இரு ந்து தப்பலாம் . சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.