உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காட்டில் அரியவகை வாத்துகள் வேட்டை: வனத்துறை விசாரணை

பழவேற்காட்டில் அரியவகை வாத்துகள் வேட்டை: வனத்துறை விசாரணை

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் வலசை வரும் பறவைகளில் குறிப்பிட்ட சில வகை வாத்துகள், கொத்து கொத்தாக மயங்கி விழுந்து இறந்ததாக வந்த தகவல் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். தமிழகத்துக்கு வலசை வரும் பெரும்பாலான அரிய வகை பறவைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் முகாமிடுகின்றன. பூநாரைகள், ஊசிவால் வாத்துகள் என ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு முகாமிடுவது வழக்கம். இதனால், பழவேற்காடு ஏரி பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பழவேற்காட்டில், அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில், வலசை வரும் காட்டு வாத்துகள் கொத்து கொத்தாக நேற்று மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இவற்றை அக்கம் பக்கத்து மக்கள், வீட்டுக்கு எடுத்து செல்வதாகவும் தகவல் பரவியது. பறவைகளை வேட்டையாடும் நபர்கள் ரசாயனங்களை தண்ணீரில் கலந்ததால் வாத்துகள் மயங்கி விழுந்து இறந்ததா என்ற கேள்வியும் எழுந்துஉள்ளது. இதன் அடிப்படையில், அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த வாத்துகளையும், தண்ணீர் மாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ