மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
14 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
14 hour(s) ago
கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்துள்ளது மணவாளநகர். இப்பகுதியில் திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இங்கு போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிக்னலில் ஏற்பட்ட கோளாறால் செயல்படாமல் உள்ளது. மேலும், போக்குவரத்தை சீர்படுத்த போலீசாரும் இல்லை.இதனால், திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வாகனங்கள் மற்றும் திருவள்ளூருக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும், சிக்னல் செயல்படாமலும், போக்குவரத்து போலீசாரும் இல்லாததால், காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுவதோடு, விபத்து அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.எனவே, மணவாள நகர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னலை சீரமைக்கவும், போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago