மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
02-Aug-2025
திருத்தணி:ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை ஒட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப் பள்ளி கிராமத்தில் உள்ள பாளையத்துயம்மன் கோவிலில், நேற்று ஆடி மாதம் கடைசி ஞாயிறு ஒட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல் பல்வேறு அம்மன் கோவில்களில் கடைசி ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை ஒட்டி திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
02-Aug-2025