உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனல்மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல்மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் நேற்று, தமிழக அரசு மின்வாரியத்தை மேலும் பல பிரிவுகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டதில், ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மின்வாரியமானது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. இந்நிலையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை உற்பத்தி, பசுமை மின்சாரம், மின் வினியோகம் என பிரிக்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மின்வாரியத்தை மேலும் பல பிரிவுகளாக பிரிப்பதால், பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோரின் சலுகை மற்றும் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது.மின்வாரியத்தை பிரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் தவறும் பட்சத்தில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ