உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சுருட்டப்பள்ளியில் பிரதோஷ விழா

 சுருட்டப்பள்ளியில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நேற்று நடந்தது. சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும், திரயோதசி திதியில் பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அதே நாளில் திரயோசி திதி வந்ததால், சிவாலயங்களில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று மாலை, 4:30 மணிக்கு மூலவர் வால்மிகீஸ்வரர் மற்றும் நந்திக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் அருகம்புல், மலர் மாலைகளால் அலங்கரித்து, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ