உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை

நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை

திருவள்ளூர்:திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி, போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, ரகளையில் ஈடுபட்டார். சென்னை புழல் சிறையிலிருந்து நேற்று முன்தினம் மதியம், திருநின்றவூர் கைதி சரவணன், 39 என்பவர் உட்பட, ஒன்பது கைதிகளை, போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது, சரவணனிடம் உறவினர்கள் பேச போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து, திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை