மேலும் செய்திகள்
அமெரிக்க கன்டெய்னர் கையாளல் சரிவு
10-Oct-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்கு றிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை மறுநாள் காலை 10:00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 250க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்போர், வேலையளிப்போர் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா முடித்தவர்கள் பங்கேற்று, தனியார் துறையில் 'அசெம்ப்ளி லைன் ஆப்பரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மிஷின் ஆப்பரேட்டர்' உள்ளிட்ட பல்வேறு வகையான பணி வாய்ப்புகளை பெற்று பயனடையலாம். இந்த முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அ லுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Oct-2025