உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி நகர் பகுதியில் சிசிடிவி பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி நகர் பகுதியில் சிசிடிவி பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி, பொன்னேரி நகரப்பகுதி சுற்றியுள்ள, 200க்கும் மேற்கண்ட கிராமங்களில் வியாபார மையமாகவும், தாலுக்கா தலைமையிடமாகவும் அமைந்து உள்ளது.இங்கு சப்-கலெக்டர், தாசில்தார், மீன்வளம், வேளாண்மை, சார்பதிவாளர், ஐந்து நீதிமன்றங்கள், அரசு கலைக்கல்லுாரி, அரசு மீன்வளக்கல்லுாரி உள்ளிட்டவைகளும் அமைந்து உள்ளன.பல்வேறு தேவைகளுக்காக பொன்னேரி நகரத்திற்கு மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில், நகரின் முக்கிய சாலை சந்திப்புகள், அரசு அலுவலங்கள் செயல்படும் பகுதிகளில் சிசிடிவி.,க்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:பொன்னேரி நகரப்பகுதியில் பழைய பேருந்து நிலையம், தேரடி, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., க்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வந்தது.தொடர் பராமரிப்பு இல்லாததால் அவை பழுதடைந்தும், உடைந்தும் போயின. தற்போது அவை இருந்த சுவடே இல்லாமல் மாயமாகி போயின.இதனால் நகரப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது, சமூக விரோதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.பொன்னேரி பழைய பேருந்து நிலையம், தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேண்பாக்கம் சாலை சந்திப்பு, அரசு அலுவலக சாலை, ரயில் நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., க்கள் பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை