உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் பஞ்சர் 10 கிராம மக்கள் கடும் அவதி

4 கி.மீ., சாலையில் 40 இடங்களில் பஞ்சர் 10 கிராம மக்கள் கடும் அவதி

வயலுார்:வயலுார் ஊராட்சி பகுதியில், 4 கி.மீ., ஒன்றிய சாலையில், 40 இடங்களில் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து சூரகாபுரம் வழியாக மும்மடிக்குப்பம், கொட்டையூர், முதுகூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.வயலுார் சாலையிலிருந்து சூரகாபுரம் வரை உள்ள 4 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. Galleryஇதில், தற்போது பெய்து வரும் மழையால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இச்சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை