உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  புத்தாண்டை வரவேற்ற மழை

 புத்தாண்டை வரவேற்ற மழை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று அதிகாலை முதல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு, ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் குளம் போல் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைந்துள்ள கன்னியம்மன் கோவில், சிப்காட், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம், பெத்திக்குப்பம், ஓபுளாபுரம், தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில், மழை வெள்ளம் வெளியேற வழியின்றி சாலையோரம் தேங்கி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !