மேலும் செய்திகள்
கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?
18-Sep-2024
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பஜார் பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள், பழம், காய்கறி, பூ, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள தொம்பரம்பேடு, தாராட்சி, போந்தவாக்கம், அனந்தேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பஜார் பகுதி உள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இங்குள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாலையில் பெருக்கெடுக்கும் மழைநீர் செல்ல கால்வாய் உள்ளது. சாலையில் தேங்கும் மழைநீர் செல்ல கால்வாய், ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு உள்ளது. இதன் வழியே மழைநீர் செல்வதால், சாலையில் தண்ணீர் தேங்காத நிலை இருந்தது. ஆனால், தற்போது பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். கால்வாய் ஒட்டி தங்களது கடைக்கு முன் பகுதியில் மேடாக்கி உள்ளனர். இதனால் சாலையில் தேங்கும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில தினங்களாக ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் இருந்து தண்ணீர் செல்ல முடியாமல் தேங்குவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18-Sep-2024