உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தமிழக - ஆந்திர எல்லையில் மழை கிருஷ்ணா நீர் வரத்து அதிகரிப்பு

தமிழக - ஆந்திர எல்லையில் மழை கிருஷ்ணா நீர் வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் பெய்து வரும் மழையால், தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணாநீரின் அளவு அதி கரித்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி, தமிழகத்திற்கு சாய்கங்கை கால்வாய் வழியே கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், ஆந்திராவில், 152 கி.மீ., பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. சில நாட்களாக தமிழக - ஆந்திர எல்லையான புதுகுப்பம், பேரடம், சத்தியவேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர், கிருஷ்ணா நீருடன் கலந்து தமிழகத்தை கடக்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 606 கன அடி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை