மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
9 minutes ago
பொன்னேரி: கனமழை காரணமாக, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ராட்சத மோட்டார்கள் உதவியுடன் வெளியேற்றப்படுகிறது. பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் கடந்த, நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நான்கு நாட்களில் அதிகமான மழை பொழிந்து, மாநில நெடுஞ்சாலைகள், தெருச்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., நகர், தேவம்மா நகர், கும்மமுனிமங்கலம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதையடுத்து, 100 குதிரை திறன் கொண்ட இரண்டு ராட்சத மோட்டர்கள் உதவியுடன் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை உறிஞ்சி,கால்வாய்கள் வழியாக ஆரணி ஆற்றிற்கு கொண்டு செல்லும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. தடப்பெரும்பாக்கம் அரசு பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திர உதவியுடன் ஆங்காங்கே கால்வாய் வெட்டி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர் அன்பழகன் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து உள்ளது.
9 minutes ago