உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு

குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரமும் உடையது. ஏரியின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் திறப்பது வழக்கம்.கனமழையால் கடந்த அக்., 8 முதல் டிச., 26 வரை தொடர்ந்து 80 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டு நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று மழை பெய்ய துவங்கியது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு 36 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.மேலும், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில் இருந்து 25 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3.102 டி.எம்.சி.,யாகவும், நீர்மட்ட உயரம் 21.93 அடியாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை