உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டுத் திடலை சீரமைக்க கோரிக்கை

விளையாட்டுத் திடலை சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில், பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறம், 'அம்மா' பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளது. 2014ல், ஊரமைப்பு மற்றும் பொது நிதியில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி வந்தனர். பெண்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.முறையான பராமரிப்பின்மையால், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும், பெண்கள் நடைபயிற்சியில் ஈடுபட முடியாத நிலையும் உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அம்மா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை சீரமைக்க வேண்டும் என, பெண்கள், சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை