ரயில் பாதையில் பாலம் அகலப்படுத்த கோரிக்கை
பள்ளிப்பட்டு:நகரியில் இருந்து, திண்டிவனம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி, சில நாட்களாக பள்ளிப்பட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக மண் கொட்டி பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.இதில், பண்டவேடு பகுதியில், பாலம் ஒன்று அமைய உள்ளது. இந்த பாலம், அந்த பகுதியில் பயிரிடப்படும் கரும்புகளை லாரியில் கொண்டு செல்ல போதுமான அகலத்தில் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் நேற்று பாண்டரவேடு பகுதியில் ரயில்பாதை அமைக்கும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.