மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மீட்பு
20-Sep-2024
திருத்தணி:திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி, 44; விவசாயி. இவர், நேற்று காலை வழக்கம்போல் தன் பசு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.அப்போது, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசிரியர் நகர் பகுதியில், பெருமாள் என்பவரின் வயல்வெளியில் பசு மாடு மேய்ந்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த பாழடைந்த விவசாய கிணற்றில் பசுமாடு திடீரென தவறி விழுந்தது.இதுகுறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
20-Sep-2024