உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தெருநாய்கள் தொல்லை குடியிருப்பு மக்கள் புகார்

 தெருநாய்கள் தொல்லை குடியிருப்பு மக்கள் புகார்

மீஞ்சூர்: நந்தியம்பாக்கத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களால், குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஆனந்தா நகரில், 100 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை, சாலையில் செல்வோரை விரட்டுகின்றன. அவ்வப்போது, குடியிருப்பு மக்களும் நாய் கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தனிநபர் ஒருவர், 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார். தெருக்களில் செல்வோரை அந்த நாய்கள் கடிக்க வரும்போது, அவற்றை விரட்டினால், நாய் வளர்ப்பவர் தகாத வார்த்தைகளால் பேசி சண்டைக்கு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று, ஆனந்தா நகர் குடியிருப்பு மக்கள், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தியம்பாக்கம் பகுதியில், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்பு மக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி