உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதியில் மரண பள்ளம் அச்சத்தில் மணவாள நகர் பகுதியினர்

குடியிருப்பு பகுதியில் மரண பள்ளம் அச்சத்தில் மணவாள நகர் பகுதியினர்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர் கருணாநிதி தெரு. 150க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இப்பகுதியில் சாலை கற்கள் பெயர்ந்து மண் சாலையாக உள்ளது. மேலும் இப்பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியில் உள்ள சிறு பாலங்கள் ஆங்காங்கே சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணவாளநகர் பகுதியில் ஆய்வு செய்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் சாலையைசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை