மேலும் செய்திகள்
தெருக்களில் பன்றிகள் உலா திருவாலங்காடு மக்கள் பீதி
9 hour(s) ago
பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மதுக்கூடமாக மாறிய அவலம்
9 hour(s) ago
பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி
9 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. இங்கு கிராம சேவை மையம் அருகே அங்கன்வாடி மையம் மகளிர் சுகாதார வளாகம் ரேஷன் கடை போன்ற அரசு கட்டடங்கள் உள்ளன.இதில் ரேஷன் கடை கட்டடம் மிகவும் பழுதடைந்து இடித்து விழும் அபாய நிலையில் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ரேஷன் கடை கட்டடத்திற்கு பதில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில், புதர் மண்டிக் கிடக்கும் அபாய நிலையில் உள்ள பழைய ரேஷன் கடை இடித்து அகற்றப்படாமல் உள்ளதால் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.புதர் மண்டிக் கிடக்கும் கட்டடத்தை அகற்ற வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் ரேஷன் கடை கட்டடத்தை அகற்ற வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்உள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago