உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

 இடிந்து விழும் அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமழிசை பேரூராட்சியில், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு, திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், செம்பம்பரம்பாக்கம், வரதராஜபுரம், நசரத்பேட்டை ஆகிய ஆறு வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தற்போது சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. தற்போது, அருகே உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில், வருவாய் அலுவலர் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ