உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது. இதில் திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கி வைத்தார்.இதில் காவல் துறையினர், வாகன விற்பனையாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியினர், தன்னார்வளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடந்தது. அப்போது கலெக்டர் பிரபுசங்கர், தலைக்கவசம் அணிவது மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் அரசு போக்குவரத்து துறை சார்பில் ஏற்படுத்திய விளம்பர வாகனத்தில் திரையிடப்படும் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படத்தை கலெக்டர் பார்வையிட்டார். பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மோகன், ஸ்ரீதரன், இளமுருகன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மோகன், காவேரி, கருப்பையா, ராஜராஜேஸ்வரி, திருவள்ளூர் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்