உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் பண்ணை வீடு அருகே ஓராண்டாக சாலை பணி பெண்டிங்

முதல்வர் பண்ணை வீடு அருகே ஓராண்டாக சாலை பணி பெண்டிங்

கடம்பத்துார்:

கடம்பத்துார் ஒன்றியம், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உளுந்தை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, வயலுார் செல்லும் ஒன்றிய சாலை, நெடுஞ்சாலைத்துறையிடம், 2023ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.இந்த நெடுஞ்சாலை கிராம சாலை திட்டத்தின் கீழ், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி நடந்து வந்தது. ஏழு மீட்டர் அகலத்தில் 2.2 கி.மீ., துாரமுள்ள இந்த நெடுஞ்சாலையில், நான்கு கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து ஓராண்டாகியும், இங்கிருந்து வயலுார் செல்லும் சந்திப்பு பகுதியில், 50 மீட்டர் துாரம் சீரமைப்பு பணி நிறைவடையாமல் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். நடந்து செல்வோரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் இளைப்பாறும் தோட்டம் அமைந்துள்ள ஊராட்சியிலேயே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணியில் அலட்சியம் காட்டுவது, பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை முழுமைப்படுத்த வேண்டுமென, உளுந்தை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலை சீரமைப்பு பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம், 50 மீட்டர் துாரமுள்ள சாலையை சீரமைக்க அறிவுறுத்தி உள்ளோம். விரைவில் விடுபட்ட சாலை சீரமைக்கப்படும்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை