உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்

கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்

பொன்னேரி: சுடுகாட்டிற்கு செல்லும் சாலை கரடு முரடாகவும், மின் விளக்கு வசதி இல்லாமலும் இருப்பதால், இறுதி சடங்கு செய்ய செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னேரி நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட செங்குன்றம் சாலையில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாடு வளாகம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. சுடுகாட்டிற்கு செல்லும் பாதை முழுதும் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. மழைபெய்தால் சாலை சகதியாக மாறுகிறது. மழைக்காலங்களில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இறந்தவர்களின் உடல்களுடன் செல்லும் வாகனங்கள், பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. மின் விளக்கு வசதியும் அங்கு இல்லாததால் இரவு நேரங்களில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன. சுடுகாடு வளாகம் கழிவுநீர், குப்பை ஆகியவற்றால் சுகாதார மற்று உள்ளது. சுடுகாடு சாலையை சீரமைத்து, மின் விளக்குகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி