மேலும் செய்திகள்
பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
29-Jul-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் - பொறுப்பு, பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், 2024 - 25ம் நிதியாண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, 658 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட சம்பா நெற்பயிரில், 57,407 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. திட்ட வழிமுறைகளின்படி, ஆவணங்கள் அனைத்தும் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகள் செலுத்திய கட்டணம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய், புள்ளியியல் மற்றும் வேளாண் துறையின் ஒருங்கிணைப்போடு, காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளின் முன்னிலையில் மகசூல் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சம்பா பருவத்தில் கடன் பெற்ற 1,054 விவசாயிகள், கடன் பெறாத 8,064 பேர் உள்ளிட்ட 9,118 விவசாயிகளுக்கு, 15.33 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Jul-2025