மேலும் செய்திகள்
வாளையாரில் ரூ.15.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
13-Aug-2025
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் நடந்த வாகன சோதனையில், பேருந்து பயணியிடம் இருந்து ஆவணமில்லாத 59.50 லட்சம் ரூபாய், 800 கிராம் வெள்ளி கட்டிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, தமிழக - ஆந்திர எல்லையில் நேற்று மதியம், மதுவிலக்கு ஆயத்தீர்வை போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் பையை சோதனை செய்ததில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. போலீசார் அவரை, ஊத்துக்கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோரக்நாத், 40, என்பது தெரிந்தது. ஆந்திராவின் நந்தியால் பகுதியைச் சேர்ந்த நந்தாகிஷன் என்பவர் கொடுத்ததாகவும், சென்னையில் ஒரு நகை வியாபாரியிடம் அப்பணத்தை தர சொன்னதாகவும், கோரக்நாத் கூறினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வாகன சோதனையில் ஆவணமில்லாத 59.50 லட்சம் ரூபாய், 800 கிராம் வெள்ளிக் கட்டிகள் நான்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.
13-Aug-2025