உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 23,500 வீடுகள் புனரமைக்க ரூ.66 கோடி

23,500 வீடுகள் புனரமைக்க ரூ.66 கோடி

சென்னை:நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள மூன்று மாவட்டங்களில், 1.20 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 15 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டடங்களை புனரமைக்க, வாரியம் முடிவு செய்தது.அதிக சேத கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், 1972ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை கட்டிய, 19 முதல் 53 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த, 25,000 வீடுகளில், 23,500 வீடுகள் சேதமடைந்துள்ளது தெரிய வந்தது. அவற்றை சீரமைக்க அரசு, 66 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில், சுவர் விரிசல், கூரை நீர்கசிவு, கழிப்பறை, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் போன்ற சீரமைப்பு மற்றும் வண்ணம் பூச்சு பணிகள் நடைபெற உள்ளன. பணிகள் ஓரிரு மாதத்தில் துவங்கும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை