உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.35,000 லஞ்சம் சார் - பதிவாளர் கைது

ரூ.35,000 லஞ்சம் சார் - பதிவாளர் கைது

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, செல்வராமச்சந்திரன், 39, பணியாற்றி வருகிறார்.திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர், 53, என்ற நிலத்தரகர். வீட்டு மனை 'லே அவுட்' அங்கீகாரத்திற்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.இதை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைத்து அங்கீகாரம் பெற்றுத்தர, சார் பதிவாளர் செல்வராமச்சந்திரன், 50,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், ஜெய்சங்கர் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை ஜெய்சங்கர், 35,000 ரூபாய்க்கு சம்மதம் தெரிவித்து அங்கீகாரம் பெற்றுத்தர கேட்டு, பணத்தை சார் பதிவாளர் அலுவலக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவலிங்கம், 41, என்பவரிடம் கொடுத்துள்ளார். சிவலிங்கம், செல்வராமச்சந்திரனின் காரில் பணத்தை வைத்துஉள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார், செல்வராமச்சந்திரன் மற்றும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ