உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்

அரக்கோணம்,:லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அரக்கோணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று இரவு திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், புளியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைத்து, செந்தில் குமார் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 45 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், அரக்கோணம் தாசில்தார் செல்வியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ