உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே, ஆற்று மணல் கடத்தியவரை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 42. இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில், சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கனகம்மாசத்திரம் போலீசார், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், புருஷோத்தமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !