உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புழல் ஏரியில் மிதந்த பள்ளி மாணவன் உடல்

புழல் ஏரியில் மிதந்த பள்ளி மாணவன் உடல்

செங்குன்றம்: செங்குன்றம், நாரவாரிகுப்பம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முரளி. இவரது மகன் சுனில், 16. அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம், சுனில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.இந்த நிலையில், புழல் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக, நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்குன்றம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரை சேர்த்தனர். விசாரணையில், காணாமல் போன முரளியின் மகன் சுனில் என தெரிந்தது. செங்குன்றம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி