மேலும் செய்திகள்
குளத்துப்பாளையத்தில் விபத்து பள்ளி மாணவன் மரணம்
30-Apr-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த கூடல்வாடியைச் சேர்ந்தவர் ரமேஷ் 55. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி அதிகாலை 'ஹீரோ ஹோண்டா பேசினோ' இருசக்கர வாகனத்தில் மணவூர் நோக்கி சென்றார்.பழையனூர் அருகே காட்டுப்பன்றிகள் குறுக்கே வந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Apr-2025