மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
7 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
8 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
சென்னை:சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 142 பயணியருடன் புறப்பட்ட 'ஏர் அரேபியா ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த விமானம், சார்ஜாவுக்கே மீண்டும் அனுப்பப்பட்டது.அங்கு, கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, சென்னை வந்தது. வழக்கமாக, அதிகாலை 3:00 மணிக்கு சென்னை வரும் ஏர் அரேபியா விமானம், மீண்டும் அதிகாலை 3:40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும்.அந்த வகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு இந்த விமானத்தில் பயணிக்க, நேற்று முன்தினம் 12:00 மணியில் இருந்து 153 பயணியர் காத்திருந்தனர்.விமான வருகை தாமதம் காரணமாக, புறப்பாடும் தாமதமானதால், மூன்று மணி நேரம் காத்திருந்து அவதியடைந்த பயணியர், நேற்று காலை 7:00 மணிக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானத்தில் பயணித்தனர்.
7 hour(s) ago
8 hour(s) ago
29-Dec-2025