வணிக வளாகத்தில் கடை விண்ணப்பம் வரவேற்பு
திருவள்ளூர்:பூமாலை வணிக வளாகத்தில் கடைகள் நடத்த, மகளிர் சுய உதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருவள்ளூர் ஜெ.என்.,சாலையில் உள்ள, பூமாலை வணிக வளாகத்தில் காலியாக 9 கடைகள் உள்ளன. இந்த கடைகளை சுழற்சி முறையில் வாடகை விடுவதற்கு, பதிவு செய்த மகளிர் சுய உதவி குழுவினரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கூட்டமைப்பு தீர்மானம் நகல், வங்கி புத்தக நகல், சுய உதவி குழு பதிவு எண், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் குறியீட்டு எண் ஆகிய விவரங்களுடன் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டடம், திருவள்ளூர் என்ற முகவரியில், வரும் 7 க்குள் விண்ணப்பிக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.