உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலுவை தொகை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம்

நிலுவை தொகை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம்

திருவள்ளூர்:கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய கடன் தொகை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம் நடக்கிறது.திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மண்டலத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் பல வகை கடன் பெற்றுள்ளோர், இதுவரை தவணை செலுத்தாமல், நிலுவை வைத்துள்ளனர். இதை வசூலிக்க, சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கடனை தீர்வு செய்வதற்காக செப்.12க்கு முன், 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதோர், ஒப்பந்தம் மேற்கொண்டும் எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவர்களும், தற்போது மொத்த கடன் தொகையையும் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை வரும் மார்ச் 12, 2025க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !