மேலும் செய்திகள்
உலக புத்தக தின விழா
24-Apr-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் தேரடி அருகில் மாவட்ட மத்திய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நாளை காலை 9:00 மணியளவில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.'புத்தக வாசிப்பு' என்ற தலைப்பில் மாணவ - மாணவியர் பங்கேற்று, மூன்று நிமிடம் பேச வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
24-Apr-2025