உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி

ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி

புழல், புழல், காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் துரைராஜ், 55. இவர், மீன் பிடித்து விற்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது, நிலைதடுமாறி ஆழமான பகுதியில் விழுந்து சேற்றில் சிக்கினார். இதையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை