குளத்தில் மூழ்கி மாணவன் பலி
கும்மிடிப்பூண்டி:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவரது மகன் அன்சாரி, 13, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார்.நேற்று மாலை, வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளித்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். உடலை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.