உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பார்வையற்ற மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

பார்வையற்ற மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

பழவேற்காடு: பழவேற்காடு, பாளையக்காரர் தெருவை சேர்ந்தவர் சுசிலா, 68; பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கணவர் இறந்தபின், ஆதரவற்ற நிலையில் இருந்த இவரை, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கவுசல்யா என்பவர் அடைக்கலம் தந்து கவனித்துக்கொள்கிறார்.இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான, உதவித்தொகை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த, மூன்று மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.இது தொடர்பாக, சுசிலா பொன்னேரி வருவாய்த்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் உதவித்தொகை கிடைக்கவில்லை. அரசின் உதவித்தொகையை கொண்டு, வாழ்வாதாரம் காத்துவந்த சுசிலா, உதவித்தொகை கிடைக்காமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளார். இவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தொடர்ந்து வழங்கிடவும், விடுபட்ட தொகையை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைத்திடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்