உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டி.பி.எம். சாலையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தம்

டி.பி.எம். சாலையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கன்டெய்னர் கிடங்குகள் ஆகியவற்றிற்கு தினமும், 5,000 கனரக வாகனங்கள் டி.பி.எம். எனப்படும் தச்சூர் பொன்னேரி மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் பயணிப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கடந்த, 2022 ல் கனரக வாகனங்கள் டி.பி.எம். சாலையில் காலை, 6:00முதல், இரவு, 10:00 மணிவரை பயணிக்க தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் மீஞ்சூர் -- வண்டலுார் வெளிவட்ட சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.தடை உத்தரவை போலீசார் சரிவர கண்காணிக்காத நிலையில், கனரக வாகனங்கள் தச்சூர் பொன்னேரி மீஞ்சூர் சாலையில் பகல் நேரங்களில் பயணித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப். 30ம் தேதி, மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுஇரண்டாவது உத்தரவும் பின்பற்றபடாத நிலையில், தற்போது மூன்றாவது முறையாக தளர்வுகளுடன் கூடிய புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அதன்படி பகல் முழுதும் இருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டு, தச்சூர் பொன்னேரி மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், காலை, 10:00 முதல், பகல், 2:00 மணிவரையும், இரவு, 9:00 மணி முதல், காலை, 6:00மணிவரையும் செல்வதற்கு அனுமதி வழங்கி பொன்னேரி சப் கலெக்டர் வாகேசங்கேத் பல்வந்த் உத்தரவிட்டு உள்ளார்.ஏற்கனவே இரண்டு முறை, தடை விதிக்கப்பட்டு, அது சரியாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய புதிய உத்தரவு எந்த அளவிற்கு பயன்தரும் என்பது போலீசாரின் கண்காணிப்பில்தான் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி