உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி தாழவேடு சமத்துவபுரம் பூங்கா

பராமரிப்பின்றி தாழவேடு சமத்துவபுரம் பூங்கா

திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில், தாழவேடு காலனி அருகே, சமத்துவபுரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும், சமத்துவபுரம் பூங்கா, 15 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.இங்கு, சறுக்கு மேடை, ஊஞ்சல், ஏற்றம், இறக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு போதிய கருவிகள் அமைக்கப்பட்டன.காலை மற்றும் மாலை நேரத்தில் பெற்றோர், தங்களது குழந்தைகளுடன் வந்து விளையாடிவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால் தற்போது விளையாட்டு கருவிகள் பழுதடைந்தும், செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளன.இதனால் பூங்காவிற்கு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.ஆனால், ஊராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு செலவு என, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை கணக்கு காட்டுகிறது. ஆனால், பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பூங்காவை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, சமத்துவபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ