உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிலதிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை

தொழிலதிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை

திருத்தணி:திருத்தணி நகராட்சி, திருப்பதி பைபாஸ் சாலை பி.எம்.எஸ்., நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணைய்யநாயுடு மகன் பிரதீஷ், 38. இவர் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இரு சக்கர வாகனம் விற்பனை ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை பிரதீஷ் நடை பயிற்சிக்கு செல்வதற்காக பைபாஸ் சாலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் திடீரென பிரதீஷ்யை மடக்கி, அவரது கால்கள் மீது இரும்பு ராடுகளால் தாக்கி விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதில் பிரதீஷின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பிரதீஷ், ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜாவின் தனிப்பட்ட உதவியாளர் என்றும், இதனால், கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் பிரதீஷ் மீது கூலிப்படை ஏவி, பிரதீஷ் கால்களை உடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை