உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

ஆர்.கே.பேட்டை:பள்ளிப்பட்டு அடுத்த கொடிவலசா காலனியை சேர்ந்தவர் சேகர், 60. இவர், கடந்த மாதம் 22ம் தேதி திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை வழியாக மாருதி காரில் வந்து கொண்டிருந்தார். ஜி.சி.எஸ்.கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. அப்போது கார், கட்டுப்பாட்டில் இருந்து விலகி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயம் அடைந்த சேகர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மனைவி தனலட்சுமி நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை