உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாமனேரியில் பாழாகும் சமுதாயக்கூடம்

தாமனேரியில் பாழாகும் சமுதாயக்கூடம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தாமனேரி கிராமத்தின் தெற்கில் அரசு தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சமுதாயக்கூடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த சமுதாயக்கூடத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், உண்டு உடறைவிடப்பள்ளி செயல்பட்டு வந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பள்ளி நடத்தப்பட்டு வந்தது. பின், இங்கிருந்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் இந்த சமுதாயக்கூடம் பயன்பாடு இன்றி பாழடைந்து வருகிறது. உண்டு உறைவிடப்பள்ளியாக செயல்பட்டு வந்த போது, மாணவர்களின் வசதிக்காக குளியல் அறை மற்றும் கழிப்பறைகளும் கட்டப்பட்டன. தற்போது ஒட்டுமொத்த வளாகமும் பாழடைந்து கிடக்கிறது. இந்த சமுதாயக்கூடத்தை புனரமைத்து, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை