உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை

சிறுமின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை

மணவூர்: திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில், சிறுமின் விசை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் இந்த நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர் டேங்கில் நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட நீர் மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோடைக்காலத்தில் நீரின்றி சிரமப்படும் நிலை உள்ளது.மேலும் சிறுமின்விசை குழாய் அமைக்கப்பட்ட பகுதி சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட்டுதனமாக அதனருகே செல்லும் போது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இந்நிலையில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள சிறுமின்விசை குழாயை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை