தொழுவமாக மாறிய ஊராட்சி நுாலகம்
பள்ளிப்பட்டுபள்ளிப்பட்டு ஒன்றியம் திருமலை ராஜபேட்டையில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். லவா ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இக்கிரமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு. ஊராட்சி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நுாலகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பயனில்லாத நுாலக வாயிலில் மாடுகளை கட்டி வைத்து தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, திட்டத்தின் நோக்கம் அறிந்து, ஒன்றிய அதிகாரிகள் இந்த நுாலகத்தை மீண்டும் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.