உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்

 பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பறிமுதல் வாகனங்கள், வழக்கு விசாரணை நிறைவடைந்ததும், மாவட்ட காவல் அலுவலகத்தில் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோட்டாட்சியர் அலுவலகம், 'காயலான்' கடை போல் காட்சியளிப்பதாக, அங்கு வரும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், நீண்ட காலமாகியும், அந்த வாகனங்கள் ஏலம் விடப்படாமல் உள்ளதால், அவற்றில் செடிகள் வளர்ந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதன் காரணமாக, பாரம்பரிய கட்டடமான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அதன் பழமையை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ