உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சி.எம்.டி.ஏ.,வில் துணை தலைவர் பதவி 13 ஆண்டுகளாக காலியாக இருப்பதால் சிக்கல்

சி.எம்.டி.ஏ.,வில் துணை தலைவர் பதவி 13 ஆண்டுகளாக காலியாக இருப்பதால் சிக்கல்

சென்னை: நகர், ஊரமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட சி.எம்.டி.ஏ.,வில், தலைவர் பதவிக்கு பெரும்பாலும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் தான் நியமிக்கப்படுகிறார்.இதற்கு அடுத்து துணை தலைவர் பதவியில், கூடுதல் தலைமை செயலர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவார்.கடந்த 2011ம் ஆண்டு, துணைத் தலைவராக சூசன் மேத்யூ இருந்தார். அவர் மாற்றப்பட்ட பின், வேறு யாரும் முழுநேர துணைத் தலைவராக நியமிக்கப்படவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், கூடுதல் பொறுப்பாக சி.எம்.டி.ஏ., துணைத் தலைவர் பதவியை கவனித்து வந்தார்.ஒவ்வொரு முறை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் மாற்றப்படும் போது, துணைத் தலைவர் பதவியை கூடுதலாக கவனிக்க வேண்டும் என்ற உத்தரவு, தனியாக பிறப்பிப்பது வழக்கம். ஆனால் தற்போது, துணைத் தலைவர் பதவி 13 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வில், முழுநேர துணை தலைவர் இல்லாததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. சமீப காலத்தில் துணை தலைவர் நிலையில் எடுக்க வேண்டிய முடிவுகள் எடுக்கப்படாமல் போகும் நிலை ஏற்படுகிறது.குறிப்பாக, சி.எம்.டி. ஏ.,வின், 278வது குழும கூட்டம் அவசர அழைப்பின் பேரில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வீட்டுவசதி துறை செயலர் என்ற அடிப்படையிலேயே, காகர்லா உஷா பங்கேற்றார். ஆனால், கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானங்களில் துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக குழும கூட்ட முடிவுகள் குறித்த 'மினிட்ஸ்' துணைத் தலைவர் பெயரில் தான் வரும். தற்போது, துணைத் தலைவர் பதவி காலி என்பதால், யார் பெயரில் இந்த குறிப்புகள் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இப்போதாவது, சி.எம்.டி.ஏ.,வுக்கு முழு நேர துணைத் தலைவர் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி