உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி கோவில் குளம் புதுப்பிக்கும் பணி விறுவிறு

சிறுவாபுரி கோவில் குளம் புதுப்பிக்கும் பணி விறுவிறு

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படும் குளம், வரலாற்று சிறப்புமிக்க குளமாகும். அந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், குளத்தை சீரமைக்கும் பணிகளுக்காக, 3.14 கோடி நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன. குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய நிலையில், தற்போது குளத்தை ஆழப்படுத்தி, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த கட்டமாக படித்துறை அமைத்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி